தமிழ்நாடு
null

தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றும்- கருத்துக்கணிப்பில் தகவல்

Published On 2024-02-08 12:40 GMT   |   Update On 2024-02-08 12:43 GMT
  • திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெறும்.
  • தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீதம் வெற்றி பெறும்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என சிவோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீதமும், மற்ற கட்சிகளுக்கு 38 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News