தமிழ்நாடு செய்திகள்
அனைவரும் இணைந்து பணியாற்றி இயற்கை இடர்ச்சூழலை வெல்வோம்: மு.க.ஸ்டாலின்
- அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்படும்.
- பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,
அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்தப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம் என்று தெரிவித்துள்ளார்.