தமிழ்நாடு

விரைவில் முக்கிய புள்ளிகள் பா.ஜ.க.வில் இணைவார்கள்: அண்ணாமலை பேட்டி

Published On 2024-02-20 15:51 GMT   |   Update On 2024-02-20 15:51 GMT
  • தமிழ்நாடு கடன் சுமையில் இருக்கிறது என்பதையே தமிழக அரசின் பட்ஜெட் உணர்த்துகிறது.
  • தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது என அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

மத்திய அரசு திட்டங்களின் பெயரை மாற்றி புது ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தான் மாநில அரசு வாடிக்கையாக செய்கிறது.

தமிழ்நாடு கடன் சுமையில் இருக்கிறது என்பதையே தமிழக அரசின் பட்ஜெட் உணர்த்துகிறது.

மண் பரிசோதனை திட்டத்தை 2015ல் கொண்டு பிரதமர் கொண்டு வந்தார். பல விவசாயிகள் பலனடையும் போது தமிழக அரசு இன்று அறிமுகம் செய்கிறது.

தமிழகத்தில் மாற்றம் வேண்டுமென தமிழக மக்கள் நினைக்கிறார்கள். பா.ஜ.க.வில் இருக்கக்கூடிய கூட்டணி வலிமையான கூட்டணியாக இருக்கும்.

தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது. ஆனால், இணைவதும், இணையாமல் செல்வதும் அந்தந்த கட்சியின் விருப்பம்.

2024 தேர்தலில் தமிழகத்தில் பிரதான கட்சிகள் 3 மற்றும் 4-ம் இடத்திற்குச் சென்றுவிடும்.

தமிழ்நாட்டில் மக்கள் அதிகாரம் கொடுத்துள்ள முக்கிய புள்ளிகள் ஓரிரு நாட்களில் பா.ஜ.க.வில் இணைய உள்ளார்கள். எனவே அனைவரையும் நாங்கள் ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News