தமிழ்நாடு

கிருஷ்ண ஜெயந்தி விழா - ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்களை கட்டிக்கொண்டு உறியடித்த அண்ணாமலை

Published On 2023-09-06 23:55 GMT   |   Update On 2023-09-06 23:55 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது.
  • பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்களை கட்டிக்கொண்டு உறியடித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் இரண்டாம் கட்டத்தை தென்காசி மாவட்டத்தில் தொடங்கினார்.

இந்நிலையில், நேற்று அவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டசபை தொகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் அருகே மாலை 4 மணிக்கு கட்சியினருடன் நடைபயணத்தை தொடங்கினார். அங்கிருந்து தெற்கு ரத வீதி, தேரடி, பஸ் நிலையம், சின்னக்கடை பஜார் ஆகிய பகுதிகள் வழியாக நடந்து வந்தார். வழிநெடுகிலும் அண்ணாமலைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறை அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ராட்டையில் அண்ணாமலை நூல் நூற்றார். ஆண்டாள் கோவில் அருகில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் துண்டால் கண்களை கட்டிக்கொண்டு உற்சாகமாக உறி அடித்தார்.

முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலுக்கு அண்ணாமலை வந்து தரிசனம் செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரையும் சந்தித்துப் பேசினார்.

Tags:    

Similar News