தமிழ்நாடு செய்திகள்

சனாதன சக்திகள் மீது நடவடிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

Published On 2023-08-08 14:10 IST   |   Update On 2023-08-08 14:10:00 IST
  • புத்தக அரங்கு 101, 102-ல் ஈரோடு போலீசார் அத்துமீறி நுழைந்து புத்தகங்களை விற்ககூடாது என்று மிரட்டி உள்ளனர்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன் எழுதிய "இந்துத்துவப் பாசிசம் வேர்களும்-விழுதுகளும்" என்ற நூலை பொள்ளாச்சி எதிர் வெளியீடு பதிப்பகம் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருக்கிறது. புத்தக அரங்கு 101, 102-ல் ஈரோடு போலீசார் அத்துமீறி நுழைந்து புத்தகங்களை விற்ககூடாது என்று மிரட்டி உள்ளனர்.

இந்தத் தகவல் தமிழக முதலமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டவுடன் நடவடிக்கை எடுத்து தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்துத்துவ சனாதன சக்திகள் மீது நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News