செய்திகள்
ஏரி கால்வாய் உடைந்து தண்ணீர் வெளியேறும் காட்சி

ஆரணி அருகே ஏரி கால்வாய் உடைந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

Published On 2021-11-07 15:10 IST   |   Update On 2021-11-07 15:10:00 IST
பையூர் கால்வாய் உடைந்து அருகில் இருந்த ஆரணி டவுன் கே.கே.நகர் சீதாராமன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் புகுந்தது.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

பையூர் கனிகலுப்பை எஸ்.வி.நகரம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு விவசாயத்திற்கு நீராதாரமாக இந்த ஏரி விளங்கி வருகின்றது.

தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்து வருவதால் கமண்டல நாகநதி ஆற்றிலிருந்து ஆரணி டவுன் பகுதியில் வரும் ஏரிகால்வாய் மூலம் பையூர் ஏரிக்கு நீர்வரத்து வந்தது. ஆனால் கால்வாய் ஆக்கிரமித்து இருந்ததால் தண்ணீர் செல்ல வழியில்லை.

இதனால் பையூர் கால்வாய் உடைந்து அருகில் இருந்த ஆரணி டவுன் கே.கே.நகர் சீதாராமன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. பாம்பு போன்ற வி‌ஷ ஜந்துகள் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

பையூர் ஏரி நிரம்பினால் அந்த பகுதியில் உள்ள மேலும் 20 ஏரிக்கு தண்ணீர் செல்லும்.

Tags:    

Similar News