செய்திகள்
மாமல்லபுரம்

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக காணலாம் - தொல்லியல் துறை

Published On 2019-11-19 08:30 IST   |   Update On 2019-11-19 08:30:00 IST
உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மாமல்லபுரம்:

இந்தியாவில் உள்ள புராதன நினைவு சின்னங்களை பராமரித்து பாதுகாத்து வரும் தொல்லியல் துறை ஆண்டுதோறும் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கடற்கரை கோவில் வளாகத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் உலக பாரம்பரிய வார விழா கொண்டாடப்பட உள்ளது



விழாவை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

Similar News