செய்திகள்

தேனி பாராளுமன்ற தொகுதியில் பண மழை- முத்தரசன் பேட்டி

Published On 2019-04-08 10:00 GMT   |   Update On 2019-04-08 10:00 GMT
தேனி பாராளுமன்ற தொகுதியில் பண மழை வீசுகிறது. இதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார். #mutharasan #parliamentelection

போடி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் போடி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனநாயகத்தை மறந்து மாற்றாக ரவுடி தனத்தை கட்டவிழ்த்து பண மழையை நம்பி அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி தேர்தலை சந்திக்கின்றன. அரசு அதிகாரத்தையும் ஆணவத்தையும் கொண்டு 40 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறலாம் என அந்த கட்சிகள் கனவு காண்கின்றது.

கடந்த 2004-ம் ஆண்டு வீசிய அலை 2019-ம் ஆண்டிலும் வீசுகிறது. எனவே தி.மு.க. கூட்டணி 40 தொகுதியிலும் அமோக வெற்றி பெறும். தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் வி.ஐ.பி. தொகுதியாக தேனி மாறியுள்ளது.

மழை வளம் குறைந்து விவசாயம் பாழ்பட்டுக் கிடக்கிறது. ஆனால் பண மழை தேனி தொகுதியில் சூறாவளியாய் வீசுகிறது. இதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #mutharasan #parliamentelection

Tags:    

Similar News