செய்திகள்
சுடுகாட்டில் உள்ள சமாதியில் வசித்து வரும் விவசாயி செல்லத்துரை குடும்பத்தினர்.

கஜா புயலால் வீட்டை இழந்தார்- 2 மாதங்களாக சுடுகாட்டில் வசிக்கும் விவசாயி

Published On 2019-01-17 06:45 GMT   |   Update On 2019-01-17 06:45 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசித்து வருகிறார். #GajaCyclone
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அடுத்த கொண்டி குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செல்லதுரை (வயது 50). இவரது மனைவி பெயர் செல்வமணி. இவர்களுக்கு முரளி, மூர்த்தி என்ற 2 மகன்கள் உள்ளனர். இரு மகன்களும் விவசாய வேலை பார்த்து வருகின்றனர்.

கடந்த கஜா புயலில் தங்களின் வீட்டை முற்றிலுமாக இழந்து விட்டனர். வீடுகட்ட பொருளாதார வசதியின்றி தவித்து வந்தனர்.

தங்குவதற்கு வேறு வழி இன்றி அருகில் உள்ள சுடுகாட்டில் உள்ள சமாதியில் 60 நாட்களாக குடியிருந்து வருகின்றனர்.

பொங்கல் அன்று வீட்டை இழந்த அந்த பழைய இடத்தில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவினை கொண்டாடினர்.

இதுபற்றி விவசாயி செல்லத்துரை கூறியதாவது:-

கஜா புயல் எங்களது வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. வீட்டை இழந்த நாங்கள் சுடுகாட்டில் உள்ள சமாதியில் டெண்ட் போட்டு குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு அரசோ அல்லது தனியார் அமைப்புகளோ வீடு கட்ட உதவி கரம் நீட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
Tags:    

Similar News