செய்திகள்

பள்ளி மாணவர்கள் செல்போன் மூலம் பாடம் படிக்க அரசு ஏற்பாடு- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2019-01-05 09:52 GMT   |   Update On 2019-01-05 09:52 GMT
ஆசிரியர் நடத்தும் பாடத்தை யூடிப் மூலம் மீண்டும் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் செல்போன் வழியாக மீண்டும் படிக்க முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில் வருமாறு:-

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புத்தகங்கள் வாங்குவதற்கும் பதிப்பகங்களை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 11 பேர் கொண்ட கல்வியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா நூலகத்தை மேலும் நவீனப்படுத்த ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய பாடத்திட்டங்களை மாணவர்கள் படிப்பதற்காக பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறந்த ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை காணொலி காட்சி மூலம் 1000 பள்ளிகளில் ஒரே நேரத்தில் பார்த்து படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியர் நடத்தும் பாடத்தை யூடிப் மூலம் மீண்டும் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் செல்போன் வழியாக மீண்டும் படிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News