செய்திகள்

வாயில் பூட்டுடன் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்த விவசாயி- நாகையில் பரபரப்பு

Published On 2018-09-29 21:51 IST   |   Update On 2018-09-29 21:51:00 IST
பேச்சுரிமை மறுக்கப்படுவதாக கூறி விவசாயி வாயில் பூட்டுடன் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகள் குறித்து பேசினர். 

இந்நிலையில் அரசின் குறைகளை எடுத்து சொல்லும் குறிப்பிட்ட விவசாயிகளை பேச அதிகாரிகள் அனுமதிப்பதில்லை என்ற குற்ற சாட்டு தொடர்ந்து இருந்து வந்தது. வழக்கம்போல நேற்றும் அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் விவசாயிகள் பேசுவதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து காலம் தாழ்த்தியதால், விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் விவசாயி தமிழ்செல்வன் வாயில் சங்கிலி பூட்டு போட்டும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து  மாவட்ட வருவாய் அலுவலருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் குறைத்தீர் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News