செய்திகள்

போராட்டத்துக்கு அனுமதி வழங்க போலீஸ் மறுப்பு- திமுக தரப்பில் ஐகோர்ட்டில் முறையீடு

Published On 2018-09-28 10:12 GMT   |   Update On 2018-09-28 10:12 GMT
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து திமுக தரப்பில் ஐகோர்ட்டில் இன்று முறையிடப்பட்டது.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த தி.மு.க. முடிவு செய்தது. கமி‌ஷன், கரப்சன்,கலெக்சன் என்ற தலைப்பில் வருகிற அக்டோபர் 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்திருந்தது.

இந்த போராட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்து விட்டனர்.

இந்த நிலையில், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்காதது குறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு தொடர உள்ளோம். அந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை தாக்கல் செய்யுங்கள், திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார். #DMK #MadrasHC
Tags:    

Similar News