செய்திகள்

இலங்கை தமிழர்கள் கொலைக்கு திமுக - காங்கிரஸ்தான் காரணம் - அமைச்சர் கருப்பணன்

Published On 2018-09-26 05:33 GMT   |   Update On 2018-09-26 05:33 GMT
இலங்கையில் ஒரே நாளில் 1 லட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக - காங்கிரஸ்தான் காரணம் என்று அமைச்சர் கருப்பணன் கூறினார். #MinisterKaruppannan #MinisterSengottaiyan
ஈரோடு:

ஈரோடு மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈரோடு செங்கோடம் பாளையத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழக கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சுழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது.-



மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்து சாதனை படைத்தவர். ஆனால் தமிழகத்துக்கு காங்கிரசுடன் தி.மு.க.வினரும் சேர்ந்து துரோகம் செய்தார்கள். இவர்களின் கூட்டணி ஆட்சி நடந்த போது தான் இலங்கையில் போர் நடந்தது. ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது மத்திய காங். அரசு இலங்கை ராணுவத்துக்கு முழு உதவியை வழங்கியது. இதை இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவே கூறி உள்ளார்.

ஈழப்படு கொலைக்கு காரணமான காங்கிரஸ்-தி.மு.க.வினரை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க ஐ.நா. சபைக்கு செல்வோம்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

அமைச்சர் கருப்பணன் கூறியதாவது.-

ஈழத்தமிழர்களுக்காக மறைந்த ஜெயலலிதா பல்வேறு உதவிகளை வாரி வழங்கி உள்ளார். தமிழ் மாநிலமாக உருவாகவும் பல நடவடிக்கைகளை எடுத்து உள்ளார்.

இலங்கை போரின் போது தங்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், சீனா ராணுவம் உதவி செய்துள்ளதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறி உள்ளார்.

அங்கு ஒரே நாளில் 1 லட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்-தி.மு.க. ஆட்சியாளர்களே காரணம். இவர்கள் அ.தி.மு.க.வை அழிக்க ஆட்சியை அகற்ற பகல் கனவு காண்கிறார்கள். ஒரு போதும் அது நடக்காது.

இவ்வாறு அமைச்சர் கருப்பணன் பேசினார்.

எம்.பி.சத்தியபாமா, எம்.எல்.ஏ.க்கள், கே.எஸ்.தென்னரசு, தோப்பு வெங்கடாசலம், சிவசுப்பிரமணி, ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பகுதி கழக செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, கோவிந்தராஜன், ஜெயராஜ், முருகுசேகர், மகளிர் அணி செயலாளர் மல்லிகாபரமசிவம், மாநில வர்த்தகஅணி செயலாளர் சிந்து ரவிசந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம், இணை செயலாளர் மாதையன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் வீரக்குமார், இணை செயலாளர் கோபால், டி.எஸ்.ஆர்.செந்தில்ராஜன், சூரம்பட்டி தங்கவேலு, ஜீவாரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். #MinisterKaruppannan #MinisterSengottaiyan

Tags:    

Similar News