காங்கிரஸ் என்பது ஒரு சித்தாந்தம்: சித்தாந்தங்கள் ஒருபோதும் அழிவதில்லை- கார்கே
- காங்கிரஸ் கட்சி முடிந்தது என்று சொல்பவர்களுக்கு நான் ஒரு விசயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன்.
- எங்களுடைய சக்தி குறைவாக இருக்கலாம். ஆனால் எங்களுடைய முதுகெலும்பு இன்னும் நேராகத்தான் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் 140-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் தலைமையகத்தில் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கார்கே பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்று காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாள். காங்கிரஸ் கட்சி முடிந்தது என்று சொல்பவர்களுக்கு நான் ஒரு விசயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய சக்தி குறைவாக இருக்கலாம். ஆனால் எங்களுடைய முதுகெலும்பு இன்னும் நேராகத்தான் இருக்கிறது. ஏழை மக்களின் உரிமைகள், மதச்சார்பின்மை, அரசியலமைப்பு ஆகியவற்றில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். ஆட்சியில் இல்லை என்றாலும், சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.
காங்கிரஸ் ஒன்றிணைக்கிறது. பாஜக பிளவுப்படுத்துகிறது. காங்கிரஸ் மதம் என்பதை ஒரு நம்பிக்கையாக மட்டும் வைக்கிறது. சிலர் மதத்தை அரசியலாக மாற்றுக்கின்றனர்.
இன்று, பாஜக-விடம் அதிகாரம் இருக்கிறது. ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை. அதனால்தான், சில சமயங்களில் தரவுகள் மறைக்கப்படுகின்றன, சில சமயங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்படுகிறது, சில சமயங்களில் அரசியலமைப்பை மாற்றுவது பற்றிய பேச்சுகள் எழுகின்றன.
காங்கிரஸ் என்பது ஒரு சித்தாந்தம், மேலும் சித்தாந்தங்கள் ஒருபோதும் அழிவதில்லை.
இவ்வாறு கார்கே பேசினார்.