செய்திகள்

ரஜினிகாந்துக்கு அரசியல் ஞானம் இல்லை- ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2018-08-19 10:26 GMT   |   Update On 2018-08-19 10:26 GMT
ரஜினிகாந்த் அ.தி.மு.க.வில் கருணாநிதி படம் வைக்க வேண்டும் எனக் கூறுகிறார். அவர் அரசியல் ஞானம் இல்லாமல் பேசுகிறார் என்று ராஜன்செல்லப்பா எம்எல்ஏ பேசியுள்ளார். #Rajinikanth #karunanidhideath

மதுரை:

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ தலைமை வகித்து பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் குடிநீர் பிரச்சினை இல்லை, எய்ம்ஸ் மருத்துவமனை, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அ.தி.மு.க. கொடுத்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தில் குறை சொல்ல முடியாத ஒரு ஆட்சியை செய்து வருகின்றனர். அ.தி.மு.க.வின் இரட்டை இலை மற்றும் கொடி இருக்கும் வரை யாரும் அசைக்க முடியாது.

அ.தி.மு.க.வின் எதிரியாக கருணாநிதியைத்தான் அடையாளம் காட்டி சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அ.தி.மு.க.வில் கருணாநிதி படம் வைக்க வேண்டும் எனக் கூறுகிறார். அவர் அரசியல் ஞானம் இல்லாமல் பேசுகிறார்.

காந்தி இடத்தில் கோட்சே படமும், ராமனிடத்தில் ராவணன் படமும் எவ்வாறு வைக்க முடியாதோ அதுபோல எம்.ஜி.ஆர். அருகே கருணாநிதியை வைக்க முடியாது. அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்கு ஏராளமான தாய்மார்கள் வந்திருந்தனர். அதே சமயத்தில் கருணாநிதி மறைவிற்கு ஒரு சிலரே பெண்கள் வந்திருந்தார்கள். தாய்மார்கள் ஆதரவு எப்போதுமே அ.தி.மு.க.விற்கு தான். மெரினாவில் கருணாநிதியின் சமாதி அமைய மக்கள் ஏற்கவில்லை. ஏற்றிருந்தால் மக்கள் அவரை முதல்வராக்கி இருப்பார்கள்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அ.தி.மு.க. அதுபோல திருப்பரங்குன் றம் தொகுதியில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெரும்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஏமாந்தது போல், இங்குள்ள மக்கள் ஏமாற மாட்டார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.போசுக்காக எதிரணியினர் தாமாகவே விலகிக் கொள்ள வேண்டும். இல்லை எனில் அவரை விமர்சிக்க வேண்டிய சூழல் வரும். வெற்று மாயைகளை மக்கள் நம்பமாட்டார்கள்

இவ்வாறு அவர் பேசினார். #Rajinikanth #karunanidhideath

Tags:    

Similar News