ராசிபலன்
null

இன்றைய ராசிபலன் 21.12.2025: இவர்களுக்கு ஆரோக்கியம் சீராகும்

Published On 2025-12-21 05:57 IST   |   Update On 2025-12-21 06:16:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

ரிஷபம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் பணிகளை விட்டுவிடும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

மிதுனம்

எதிலும் அவசரத்தைத் தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகள் ஒத்துழைக்க மறுப்பர். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. பாகப்பிரிவினைகளில் தாமதம் ஏற்படும்.

கடகம்

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கூட்டுத் தொழிலை தனித் தொழிலாக்க முயற்சிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது.

சிம்மம்

ஆரோக்கியம் சீராகும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம். சொத்துக்களால் ஆதாயம் உண்டு.

கன்னி

பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.

துலாம்

சுபச்செலவுகள் ஏற்படும் நாள். முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. தொழில் சீராக நடைபெறும்.

விருச்சிகம்

தொழில் ரீதியாகப் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

தனுசு

பயணங்கள் பலன் தருவதாக அமையும். இடம் வாங்க, விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

வி.ஐ.பிக்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். வருமானம் திருப்தி தரும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.

கும்பம்

எடுத்த முயற்சி எளிதில் நிறைவேறும் நாள். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மீகப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

மீனம்

பங்குதாரர்களுடன் ஏற்பட்ட பகை விலகும் நாள். தொலைதூரப் பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

Tags:    

Similar News