செய்திகள்

72-வது சுதந்திர தினம்- 13 ஆயிரம் சதுர அடியில் மாணவர்கள் வரைந்த தேசியக் கொடி

Published On 2018-08-15 18:49 IST   |   Update On 2018-08-15 18:49:00 IST
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீமுத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 13 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட தேசிய கொடியை வண்ணப்பொடிகளால் உருவாக்கி சாதனை முயற்சி மேற்கொண்டனர். #IndependenceDayIndia
சீர்காழி:

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீமுத்துராஜம் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 130 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 160 அடி நீளம், 81 அடி அகலத்தில், 90 கிலோ வண்ணப்பொடிகளை கொண்டு 50 நிமிடத்தில் சுமார் 13 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட தேசிய கொடியை உருவாக்கினர். மாணவர்களின் சாதனை முயற்சியை பாராட்டி நடந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சிவசங்கர் தலைமை வகித்தார். இயக்குனர் மதன், நிர்வாக ஆலோசனை குழு உறுப்பினர் செல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

சீர்காழி எம்.எல்.ஏ.பாரதி மாணவர்களின் சாதனை முயற்சியை நேரில் பார்வையிட்டு வாழ்த்தி பேசினார். தொடர்ந்து செம்மங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜமாணிக்கம், வைத்தீஸ்வரன்கோயில் கூட்டுறவு வங்கி தலைவர் போகர்ரவி, பால் கூட்டுறவு சொசைட்டி தலைவர் அஞ்சம்மாள், துணை தலைவர் பார்த்தசாரதி,  ஆதமங்கலம் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

பள்ளி முதல்வர் ஜேக்கப் ஞானசெல்வம் வரவேற்றார். துணை முதல்வர் பூவிழி நன்றி கூறினார். #IndependenceDayIndia 
Tags:    

Similar News