செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 37 ஆக உயர்த்தி முதல்வர் அறிவிப்பு

Published On 2018-06-01 06:13 GMT   |   Update On 2018-06-01 06:13 GMT
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்காக விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வயது வரம்பை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். #TNAssembly #TNPSC
சென்னை:

சென்னையில் சட்டசபை கூட்டத்தின் போது, 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிக்கையில்.,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்:-

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, 1-ஏ மற்றும் 1-பி ஆகிய தேர்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது உச்சவரம்பை 35-லிருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி., பி.சி ஆகிய பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது உச்சவரம்பு 35-லிருந்து 37 ஆகவும் இட ஒதுக்கீடு இல்லாத பிற பிரிவினருக்கு 30-லிருந்து 32 ஆகவும் வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மேலும் 264 பாடப்பிரிவுகள் புதிதாக உருவாக்கப்படும். ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

ஆகிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
Tags:    

Similar News