செய்திகள்

பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்காவிட்டால் போராட்டம்- பிஆர் பாண்டியன்

Published On 2018-05-12 04:22 GMT   |   Update On 2018-05-12 05:11 GMT
தென் மாவட்டங்கள் பயன்பெறும் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்காவிட்டால் போராட்டம் நடைபெறும் என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலசொக்கநாதபுரம்:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் போடி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென் மாவட்டங்கள் பயன்பெறும் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்க முன்வராத மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கிறோம். தேனி மாவட்டத்தில் விவசாய பம்பு செட்களுக்கு மின் மீட்டர் பொருத்துவதை கைவிட வேண்டும். பெரியாறு அணையில் ஏற்கனவே இருந்த மின் இணைப்பை கேரள அரசு பாதுகாப்பு கருதி மீண்டும் வழங்க வேண்டும்.

மத்திய தொழில் படையை பாதுகாப்புக்காக நிறுவ வேண்டும். இதே போல் பேபி அணையை பலப்படுத்த கட்டுமானப் பணிகளை செய்ய வேண்டும். பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்குவதற்கு அனுமதி அளிக்காவிட்டால், அனைத்து விவசாயிகளையும் திரட்டி விரைவில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #PeriyarDam
Tags:    

Similar News