விளையாட்டு
null

மகனின் கிரிக்கெட் கனவுக்காக நிலத்தை விற்ற தந்தை - வைபவ் சூர்யவன்ஷியின் கதை

Published On 2025-04-29 11:41 IST   |   Update On 2025-04-29 16:37:00 IST
  • 10 வயதில் இருந்தே நாள் ஒன்றுக்கு 600 பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார்.
  • டோனி உலக கோப்பையை வென்ற ஆண்டில் (2011) தான் அவர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைபவ் சூர்யவன்ஷி 2011-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி பீகார் மாநிலம் சமஸ்கிபூர் மாவட்டம் தாஜ்பூர் கிராமத்தில் பிறந்தார். தலைநகர் பாட்னாவில் இருந்து 86 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமம் இருக்கிறது.

தனது இளம் வயதில் பீகார் அணிக்கு ரஞ்சி டிராபியில் அறிமுகம் ஆனார். அவருக்கு அப்போது 12 வயதாகும். முதல் தர போட்டியில் விளையாடியதன் மூலம் ஐ.பி.எல்.லில் ஆட தகுதி பெற்றார்.

13 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஐ.பி.எல்.லில் ரூ.1.1 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. தற்போது தனது 14 வயதில் சதம் அடித்து சூர்யவன்ஷி புதிய வரலாறு படைத்துள்ளார்.

சூர்யவன்ஷியின் கிரிக்கெட் கனவை நனவாக்குவதற்காக அவரது தந்தை சஞ்சீவ் விவசாய நிலத்தை விற்றுள்ளார். 10 வயதில் இருந்தே நாள் ஒன்றுக்கு 600 பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். 16 முதல் 17 வயதுடைய பந்து வீச்சாளர்களை அவர் எதிர்கொண்டு விளையாடினார். மகனுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அவரது தந்தை வழங்கினார். கடினமான உழைப்புக்கு ஏற்ற பலன் தற்போது கிடைத்திருக்கிறது. மிக இளம் வயதில் சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ஷர்துல் தாக்கூருக்கு எதிரான முதல் பந்தில் சிக்சர் அடித்து தனது ஐ.பி.எல்.லில் வாழ்க்கையை அவர் தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் போற்றும் நபராக வைபவ் சூர்யவன்ஷி உள்ளார். சிறிய கிராமத்தில் இருந்து வந்து ஐ.பி.எல்.லில் முத்திரை பதித்துள்ளார்.

டோனி உலக கோப்பையை வென்ற ஆண்டில் (2011) தான் அவர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Full View
Tags:    

Similar News