விளையாட்டு
JSW ஸ்போர்ட்ஸ் உடனான உறவை முறித்த நீரஜ் சோப்ரா... புதிய நிறுவனத்தைத் தொடங்கினார்
- 2016 ஆம் ஆண்டு நீரஜ் சோப்ராவுக்கு JSW ஸ்போர்ட்ஸ் உடனான தொடர்பு தொடங்கியது.
- நீரஜ் சோப்ராவின் ஒவ்வொரு வெற்றிக்கும் JSW ஸ்போர்ட்ஸ் உடன் நின்று உதவியது.
இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா உள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நீரஜ் சோப்ரா JSW ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடனான தனது தொடர்பை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு நீரஜ் சோப்ராவுக்கு JSW ஸ்போர்ட்ஸ் உடனான தொடர்பு தொடங்கியது. நீரஜ் சோப்ராவின் ஒவ்வொரு வெற்றிக்கும் JSW ஸ்போர்ட்ஸ் உடன் நின்று உதவியது.
நீரஜ் தற்போது வேல் ஸ்போர்ட்ஸ் என்ற புதிய தடகள மேனேஜ்மேண்ட் நிறுவனம் மூலம் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளார்