ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
ஆண்கள் மல்யுத்தம் கிரேகோ-ரோமன் 87 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் சுனில் குமார், ஈரான் வீரரிடம் தோல்வியடைந்தார். வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இன்று மதியம் விளையாடுகிறார்.
ஆண்கள் மல்யுத்தம் கிரேகோ-ரோமன் 60 கிலோ பிரிவில் இந்திய வீரர் ஞானேந்தர், 67 கிலோ பிரிவில் நீரஜ், 77 கிலோ பிரிவில் விகாஸ் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
ஆண்கள் மல்யுத்தம் கிரேகோ-ரோமன் 87 கிலோ பிரிவில் இந்திய வீரர் சுனில் குமார், கஜகஸ்தான் வீரரை 9-1 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி கொரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
இந்திய அணி இதுவரை 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், கஜகஸ்தான் வீரரை 21-12, 21-13 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, இந்தோனேசிய வீராங்கனையை 21-16, 21-16 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
3வது காலிறுதியில் இலங்கை வெற்றிபெற 117 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான்.
35 கிலோமீட்டர் நடை ஓட்டம் கலப்பு அணியில் இந்தியாவின் ராம் பாபு, மஞ்சுராணி ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
இந்திய அணி இதுவரை 15 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 70 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி, கஜகஸ்தானை 159-154 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.
கபடி ஆண்கள் பிரிவில் இந்திய அணி தாய்லாந்து அணியை 63-26 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.