விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-10-04 01:03 GMT

வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி, மலேசியாவை 158-155 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

2023-10-04 00:43 GMT

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியின் 3வது காலிறுதியில் டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான் முதலில் களமிறங்குகிறது.

2023-10-03 15:13 GMT

நான்காவது இடத்தில் இந்தியா:

ஆசிய விளையாட்டில் பத்தாவது நாள் முடிவில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்களை குவித்துள்ளது. இதில் 15 தங்கம், 26 வெள்ளி மற்றும் 28 வெண்கல பதக்கங்கள் அடங்கும். இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா தொடர்ந்து நான்காவது இடத்தில் உள்ளது.

2023-10-03 14:47 GMT

ஆசிய விளையாட்டின் 10-ம் நாளில் இந்தியா 9 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் அடங்கும். 

2023-10-03 13:44 GMT

குத்துச் சண்டை:

ஆண்கள் குத்துச் சண்டையில் இந்தியாவின் நரேந்தர் வெண்கலம் வென்று அசத்தல்.

2023-10-03 13:17 GMT

ஈட்டி எறிதல்:

ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்தார் அனு ராணி 

2023-10-03 12:36 GMT

தடகளம்:

ஆண்களுக்கான 800 மீட்டர் பிரிவில் இந்தியாவின் முகமது அஃப்சல் வெள்ளி பதக்கம் வென்றார். 

2023-10-03 12:13 GMT

தடகளம்:

பெண்களுக்கான 5000 மீட்டர் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் பருல் சௌத்ரி தங்கம் வென்று அசத்தல்.

2023-10-03 11:32 GMT

தடை ஓட்டம்:

பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கல பதக்கம் வென்று அசத்தல்.

2023-10-03 10:16 GMT

பேட்மிண்டன்:

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

Tags:    

Similar News