விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-10-04 13:09 GMT

ஈட்டி எறிதல்:

ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. 88.88 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து நீரஜ் சோப்ரா அசத்தல். இந்தியாவின் கிஷோர் ஜெனா 87.54 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து வெள்ளி வென்றார்.

2023-10-04 13:03 GMT

தடகளம்:

4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்.

2023-10-04 12:03 GMT

தடகளம்:

5000 மீட்டர் ஸ்டீபில் சேஸ் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சேபில் வெள்ளி பதக்கம் வென்றார்.

2023-10-04 11:23 GMT

மல்யுத்தம்:

ஆசியா விளையாட்டில் இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் சுனில் குமார் வெண்கல பதக்கம் வென்று அசத்தல்.

2023-10-04 10:44 GMT

ஸ்குவாஷ்:

ஆண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் இறுதி போட்டிக்கு முன்னேறினார். அறையிறுதியில் இவர் ஹென்ரி லெயுங்-ஐ 3-0 என்ற அடிப்படையில் வீழ்த்தினார்.

2023-10-04 10:05 GMT

குத்து சண்டை:

ஆசிய விளையாட்டின் குத்து சண்டையில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் என ஐந்து பதக்கங்களை பெற்று அசத்தல்.

2023-10-04 09:48 GMT

ஆண்கள் ஹாக்கி:

ஆண்கள் ஹாக்கி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. அரையிறுதி போட்டியில் தென் கொரியாவை இந்திய அணி 5-3 என்ற கணக்கில் வீழ்த்தியது.

2023-10-04 08:11 GMT

பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி, இந்தோனேசிய ஜோடியை 2-1 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

2023-10-04 08:03 GMT

குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெயின், சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்து வெள்ளி வென்றார். இதுவரை இந்திய அணி 16 தங்கம், 27 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

2023-10-04 07:36 GMT

பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி 2வது செட்டை 16-21 என்ற கணக்கில் இழந்தது.

Tags:    

Similar News