ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
ஆசிய விளையாட்டில் இன்று நடைபெற்ற பெண்கள் ஆக்கி போட்டியில் சீன அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன்மூலம் சீனா பெண்கள் ஆக்கி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு 24 அம்புகள் பிரிவு, 50 மீட்டர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில், 235- 230 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றுள்ளது.
ஆண்கள் கபடி போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று மதியம் இந்தியா, ஜப்பான் அணியுடன் மோதியது. இதில், 56- 30 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றது.
வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரவீன் ஓஜஸ், அபிஷேக் வர்மா மற்றும் பிரதமேஷ் ஜவகர் ஆகியோர் அடங்கிய அணி சீன தைபே அணியுடன் மோதியது.
இதில் இந்திய அணி 234-224 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் தென்கொரியா அணியை சந்திக்கிறது.
ஆண்கள் கபடி போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி இன்று மதியம் ஜப்பானை எதிர்கொள்கிறது.
வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரவீன் ஓஜஸ், அபிஷேக் வர்மா மற்றும் பிரதமேஷ் ஜவகர் ஆகியோர் அடங்கிய அணி பூடானுடன் மோதியது.
இதில் இந்திய அணி 235-221 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சந்து ஜோடி, மலேசியா ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
இதுவரை இந்திய அணி 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், மலேசிய வீரருடனான மோதலில் 21-16 என முதல் செட்டைக் கைப்பற்றினார். 2வது செட்டை 21-23 என இழந்தார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் பிரனாய் 22-20 என மலேசிய வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று மதியம் நடைபெறும் மல்யுத்தம் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 50, 53, 57 மற்றும் 130 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், மலேசிய வீரருடனான மோதலில் 21-16 என முதல் செட்டைக் கைப்பற்றினார்.