ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
மல்யுத்தம் பெண்கள் 57 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவின் மான்சி அஹல்வாட், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையுடன் இன்று மதியம் மோதுகிறார்.
மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பூஜா கெலாட் 1-10 என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.
வில்வித்தை பெண்கள் காம்பவுண்டு பிரிவு இறுதியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம், அதிதி கோபிசந்த் ஸ்வாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய அணி சீன தைபேயுடன் மோதியது.
இதில் இந்திய அணி 230-228 என்ற கணக்கில் வென்று தங்கம் வென்றது.
ஆண்கள் கபடியில் இந்திய அணி சீன தைபே அணியை 50-27 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மல்யுத்தம் பெண்கள் 57 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மான்சி அஹல்வாட் 2-6 என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.
மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பூஜா கெலாட் 5-0 என்ற கணக்கில் மங்கோலியா வீராங்கனையை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மல்யுத்தம் பெண்கள் 53 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அன்டிம் பங்கால், ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.
வில்வித்தை பெண்கள் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம், அதிதி கோபிசந்த் ஸ்வாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய அணி இந்தோனேசியாவுடன் மோதியது.
இதில் இந்திய அணி 233-219 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன வீராங்கனையிடம் 16-21, 12-21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார்.
மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவின் பூஜா கெலாட் 10-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.