விளையாட்டு
null

இந்தியா- பாகிஸ்தான் பதற்றம் எதிரொலி: ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைப்பு

Published On 2025-05-09 12:19 IST   |   Update On 2025-05-09 12:22:00 IST
  • 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
  • தரம்ஷாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது.

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்து உள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றுள்ள நாடுகளின் வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி போட்டிகள்  ஒத்திவைக்கப்படுவதாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தரம்ஷாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணி வீரர்களையும் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News