கிரிக்கெட் (Cricket)

தேர்வுக்குழுவில் திடீர் திருப்பம்- இந்திய அணியில் அதிரடி மாற்றம்: வெளியான ஷாக் தகவல்

Published On 2025-12-26 16:44 IST   |   Update On 2025-12-26 16:44:00 IST
  • கம்பீர், அகார்கர் வந்த பிறகு இந்திய வீரர்கள் தேர்வு குறித்து பல எதிர்மறையாக கருத்துக்கள் வந்தது.
  • தொடக்க வீரராக 3 சதங்கள் விளாசிய சாம்சனை நீக்கி விட்டு சுப்மன் கில்லை களமிறங்கினார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகார்கர் உள்ளனர். இருவரும் வந்த பிறகு இந்திய வீரர்கள் தேர்வு குறித்து பல எதிர்மறையாக கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்து வருகிறது.

ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது. 3 வடிவ கிரிக்கெட்டுக்கும் ஒரே கேப்டன் தான் இருக்க வேண்டும் என கூறி டி20 அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தொடக்க வீரராக 3 சதங்கள் விளாசிய சாம்சனை நீக்கி விட்டு சுப்மன் கில் களமிறங்கினார். இப்படி பல மாற்றங்களை தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் திறமையான வீரர்கள் இருந்தும் குறிப்பிட்ட வீரர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் கருத்து வெளியாகி வந்தது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சுப்மன் கில் அந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அஜித் அகார்கர், கவுதம் கம்பீர் திருந்தி விட்டார்களாக என ரசிகர்கள் கேள்வி எழுப்பி பல்வேறு கருத்துகளை கூறி வந்தனர்.

ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் காரணம் இல்லை. தேர்வுக்குழுவில் இருந்த அந்த இரண்டு பேர் முக்கிய காரணமாக இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதன்படி தேர்வுக்குழுவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களாக ஆர்பி சிங், ஓஜா இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் தான் சமீபத்தில் இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர். டி20 அணியில் கில் வேண்டாம் என்றும் சஞ்சு சாம்சனே தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

இதுமட்டுமில்லாமல் கில்லை ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக ஒருநாள் போட்டியின் கேப்டனாக ரோகித் சர்மாவை மீண்டும் நியமிக்க அவரிடம் ஆர்பி சிங் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதற்கு ரோகித் சர்மாவிடம் எந்தவொரு பதிலும் வரவில்லை என தெரிகிறது.

அவர் இதற்கு சரி என்றால் 2027-ம் ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும்.

அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பையுடன் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அந்த இடத்திற்கு ஓஜா அல்லது ஆர்பி சிங் ஆகிய இருவரில் ஒருவர்தான் அடுத்த தேர்வுக்குழு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News