கிரிக்கெட் (Cricket)

தொடர் தோல்வி எதிரொலி: இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஆகிறார் ரவி சாஸ்திரி?

Published On 2025-12-26 11:03 IST   |   Update On 2025-12-26 11:03:00 IST
  • ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
  • ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்தது. 3 போட்டியிலும் ஆஸ்திரேலியாவே வென்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது விமர்சனத்துக்குள்ளானது. இதனால் தலைமை பயிற்சியாளரை மாற்ற பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் வெளியாகியது. முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலரும் மெக்கல்லமை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் உள்ளார். அவர் 2022 முதல் இங்கிலாந்து பயிற்சியாளராக உள்ளார். 2024-ல் அனைத்து வடிவங்களுக்கும் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் 2027 வரை ஒப்பந்தம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News