உலகக் கோப்பை குத்துச்சண்டை: 20 பதக்கங்களை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
- இந்த தொடரில் 9 தங்கப்பதக்கம் உள்பட 20 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது.
- உஸ்பெகிஸ்தான் 4 தங்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்தது.
உலக கோப்பை குத்துச்சண்டை (World Boxing Cup) உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்தது. இதில் மொத்தம் 38 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் 10 எடை பிரிவுகளில் (weight categories) நடைபெற்றது.
இந்த தொடரில் 9 தங்கப்பதக்கம் உள்பட 20 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது. உஸ்பெகிஸ்தான் 4 தங்கங்களுடன் இரண்டாவது இடமும் இங்கிலாந்து 2 தங்கங்களுடன் மூன்றாவது இடமும் பிடித்தது. மற்ற நாடுகள் (ஆஸ்திரேலியா, ஜப்பான், சீன தைபே, கஜகஸ்தான், போலந்து) தலா 1 தங்கம் வென்றன.
இந்நிலையில் உலகக் கோப்பை குத்துச்சண்டை தொடரில் 20 பதக்கங்களை வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் எதிர்காலத்திலும் பல சாதனைகள் புரிந்து நாட்டிற்கு பெருமை சேர்க்க உங்களை வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.