கிரிக்கெட் (Cricket)

எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டுமா? - வாஷிங்டன் சுந்தரிடம் கிண்டலாக பேசிய ரோகித்

Published On 2024-08-03 08:49 IST   |   Update On 2024-08-03 08:49:00 IST
  • இறுதியில் இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
  • வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் வீரர்கள் களம் இறங்கினர். இறுதியில் இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது.

போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், 7-வது வீரராக களமிறங்கி துனித் வெல்லலகே 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என 67 ரன்கள் அடித்தார். 29-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சை துனித் வெல்லலகே எதிர்கொண்டார். அப்போது, வாஷிங்டன் சுந்தர் எல்பிடபிள்யூ அவுட் கேட்க நடுவர் இல்லை என்று கூறினார். இதனால் டிஆர்எஸ் எடுக்க இந்திய அணி முடிவு செய்தது.

அப்போது, வாஷிங்டன், ரோகித் சர்மாவை பார்க்க, அதற்கு அவர் கேலியாக, "என்ன? நீ சொல்லு. ஏன் என்னைப் பார்க்கிறாய்? நான் உனக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டுமா?" என்று கூறுகிறார்.

ரோகித் சர்மா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரகிறது.


Tags:    

Similar News