கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: வங்கதேசம் 294 ரன்கள் குவிப்பு

Published On 2024-12-08 23:27 IST   |   Update On 2024-12-08 23:27:00 IST
  • டாஸ் வென்று முதலில் ஆடிய வங்கதேசம் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 294 ரன்களை எடுத்தது.
  • 6வது விக்கெட்டுக்கு இணைந்த மஹமதுல்லா-ஜேகர் அலி ஜோடி 96 ரன்கள் சேர்த்தது.

செயிண்ட்கிட்ஸ்:

வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் அரை சதமடித்து 60 ரன்னில் அவுட்டானார். கேப்டன் மெஹிதி ஹசன் 74 ரன்னில் வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய மஹமதுல்லா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஜேகர் அலி 48 ரன்னில் அவுட்டானார்.

6வது விக்கெட்டுக்கு இணைந்த மஹமதுல்லா-ஜேகர் அலி ஜோடி 96 ரன்கள் சேர்த்தது.

இறுதியில், வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 294 ரன்களை எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

Tags:    

Similar News