கிரிக்கெட் (Cricket)

லண்டனில் இருந்தபடியே உடல் தகுதியில் தேர்ச்சி... கோலிக்கு மட்டும் விலக்கு ஏன்? - நெட்டிசன்கள் கேள்வி

Published On 2025-09-03 13:38 IST   |   Update On 2025-09-03 13:38:00 IST
  • பிசிசிஐ அனுமதியுடன் கோலி லண்டனில் உடற்தகுதியை நிரூபித்தார் .
  • கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டெஸ்ட் கேப்டன் சுப்மன்கில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு உடல் தகுதிக்கான சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இதே போல ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.

இதனிடையே லண்டனில் இருந்தபடியே விராட் கோலி.உடற்தகுதியை உறுதிப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற இந்திய வீரர்கள் பெங்களூரு வந்து உடற்தகுதியை நிரூபிக்கையில், லண்டனில் இருந்தபடியே விராட் கோலி. உடற்தகுதியை பிரூபித்துள்ளார்.

பிசிசிஐ அனுமதியுடன் லண்டனில் உடற்தகுதியை நிரூபித்திருந்தாலும், ரோஹித் உள்ளிட்ட மற்ற வீரர்கள் வரும்போது இவருக்கு மட்டும் ஏன் விலக்கு என பலரும் கேள்வி எழுப்புவதால் இது விவாதப் பொருளாகியுள்ளது.

Tags:    

Similar News