கிரிக்கெட் (Cricket)

150-க்கு மேல் பார்ட்னர்ஷிப்: சச்சின்- கங்குலி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி

Published On 2025-10-25 16:34 IST   |   Update On 2025-10-25 16:34:00 IST
  • ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி 170 பந்தில் 168 ரன்கள் குவித்தது.
  • 12ஆவது முறை இந்த ஜோடி 150 ரன்களை தாண்டியுள்ளது.

ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா சதம் விளாச, விராட் கோலி அரைசதம் அடிக்க இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

சுப்மன் கில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர்.

ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 168 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது. இதன்மூலம் 5 வருடத்திற்குப் பிறகு இந்த ஜோடி 100 ரன்களை தாண்டியது.

அத்துடன் 150 ரன்களுக்கு மேல் சேர்த்ததன் மூலம் சச்சின் தெண்டுல்கர்- சவுரவ் கங்குலி ஜோடியின் சாதனையை சமன் செய்துள்ளது.

சச்சின் தெண்டுல்கர்- கங்குலி ஜோடி ஒருநாள் கிரிக்கெட்டில் 12 முறை 150 ரன்களை தாண்டி அடித்துள்ளது. தற்போது சிட்னி போட்டியின் மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி இந்த சாதனையை சமன் செய்துள்ளது. தில்சன்- சங்ககரா ஜோடி 7 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.

Tags:    

Similar News