கிரிக்கெட் (Cricket)
விஜய் ஹசாரே தொடரில் சிக்ஸரில் சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்
- ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின
- ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 6 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட வீரர் என்ற வரலாறு படைத்தார் ருதுராஜ்.
ருதுராஜ் மொத்தமாக 112 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அடுத்த இடங்களில் 108 சிக்ஸர்களுடன் மணிஷ் பாண்டே, விஷ்ணு வினோத் ஆகியோர் உள்ளனர்.