கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் - ஸ்டார்க் புதிய சாதனை

Published On 2026-01-08 16:23 IST   |   Update On 2026-01-08 16:23:00 IST
  • ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்டார்க் தொடர் நாயகன் விருதை வென்றார்.
  • ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 567 ரன் குவித்தது. 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 88. 2 ஓவரில் 342 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 160 ரன்கள் இலக்காக இருந்தது.

168 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. ஆஸ்திரேலியா 31.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடக்கை பந்துவீச்சாளர் என்ற ரங்கனா ஹெராத்தின் சாதனையை மிட்செல் ஸ்டார்க் சமன் செய்துள்ளார்.

93 டெஸ்ட் போட்டிகளில் ஹெராத் 433 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில், ஸ்டார்க் 106 டெஸ்ட் போட்டிகளில் 433 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில வாசிம் அக்ரம் 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

Tags:    

Similar News