தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சுப்மன் கில் இனி விளையாட மாட்டார் என அறிவிப்பு
- முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார்.
- சுப்மன் கில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்கரம் 31 ரன் எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்சில் 3 பந்துகள் விளையாடிய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனால் 2 ஆவது இன்னிங்சில் சுப்மன் கில் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், கழுத்து வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், முதல் டெஸ்டில் இனி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.