null
நீங்கள் ஒரு போராளி.. அன்று அனில் கும்ப்ளே.. இன்று ரிஷப் பண்ட்.. புகழாரம் சூட்டும் ரசிகர்கள்
- இர்பான் பதான் ரிஷப் பண்டை போராளி என தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- காயத்திலும் இந்திய அணிக்காக பேட்டிங் செய்த ரிஷப் பண்டுக்கு ரசிகர்கள் புகழாரம் சுட்டியுள்ளனர்.
இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து இருந்தது. ரிஷப்பண்ட் 37 ரன்னில் இருக்கும் போது காயத்தால் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
2-வது நாள் ஆட்டத்தின் போது மீண்டும் ரிஷப் பண்ட் களமிறங்கி அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்தது.
இந்நிலையில் காயத்திலும் இந்திய அணிக்காக பேட்டிங் செய்த ரிஷப் பண்டுக்கு ரசிகர்கள் புகழாரம் சுட்டியுள்ளனர். மேலும் 2002-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே கிழிந்த தாடையுடன் பந்து வீசி அசத்தினார். அவருடன் ரிஷப் பண்டை ஒப்பிட்டு ரசிகர்கள் உள்பட முன்னாள் இந்திய வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக இர்பான் பதான் ரிஷப் பண்டை போராளி என தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.