கிரிக்கெட் (Cricket)

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது காட்டு மிராண்டித்தனமானது- பாகிஸ்தானை விமர்சித்த ரஷித்கான்

Published On 2025-10-18 12:25 IST   |   Update On 2025-10-18 12:25:00 IST
  • பாகிஸ்தானுக்கு எதிராக வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ஆப்கானிஸ்தானின் முடிவை நான் வரவேற்கிறேன்.
  • முகமது நபி, பரூக்கி உள்ளிட்ட வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். 20 ஓவர் போட்டி அணி கேப்டன் ரஷீத்கான் கூறும்போது, ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைப்பது முற்றிலும் ஒழுக்கக்கேடானது மற்றும் காட்டு மிராண்டித்தனமானது. பாகிஸ்தானுக்கு எதிராக வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ஆப்கானிஸ்தானின் முடிவை நான் வரவேற்கிறேன் என்றார். அதேபோல் முகமது நபி, பரூக்கி உள்ளிட்ட வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News