கிரிக்கெட் (Cricket)
பிசிசிஐ-ன் இடைக்காலத் தலைவராகிறார் ராஜீவ் சுக்லா
- பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி 2022 அக்டோபர் முதல் இருந்து வருகிறார்.
- சவுரவ் கங்குலியை தொடர்ந்து 36-வது தலைவராக ரோஜர் பின்னி பொறுப்பேற்றார்.
பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி 2022 அக்டோபர் முதல் இருந்து வருகிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் 1983 உலகக் கோப்பை வென்றவருமான இவர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து 36-வது தலைவராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் 70 வயது உச்ச வரம்பை எட்ட உள்ளதால், பிசிசிஐ-யின் தலைவர் பதவியில் இருந்து ரோஜர் பின்னி விலகவிருப்பதாகவும், பிசிசிஐயின் தற்போதைய துணைத் தலைவரான ராஜீவ் சுக்லா ஜூலை மாதத்தில் இருந்து இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. செப்டம்பரில் புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.