கிரிக்கெட் (Cricket)

பின் ஆலன் அதிரடி சதம்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து # T20WorldCup

Published On 2026-03-04 22:04 IST   |   Update On 2026-03-04 22:04:00 IST
  • டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா:

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது.

யான்சென் அதிரடியாக ஆடி 30 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 55 ரன்கள் குவித்தார். பிரேவிஸ் 34 ரன்னும், ஸ்டப்ஸ் 29 ரன்னும் எடுத்தனர்.

நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்ரி , மெக்கன்சி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசினர்.

முதல் விக்கெட்டுக்கு பின் ஆலன்டிம் சைபர்ட் ஜோடி 117 ரன்கள் சேர்த்த நிலையில் டிம் சைபர்ட் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் ஆலன் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 33 பந்துகளில் 8 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் நியூசிலாந்து 12.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.

Tags:    

Similar News