WPL 2026: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
- மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது.
- அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 74 ரன்கள் குவித்தார்.
நவிமும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீராங்கனைகளாக அமேலியா கெர்- கமாலினி களமிறங்கினர். இதில் கெர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து கமாலினி 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து நாட் ஸ்கிவர்-பிரண்ட்- ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ஸ்கிவர் 46 பந்தில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து வந்த நிக்கோலா கேரி தொடக்க முதலே அதிரடியாக விளையாடி 12 பந்தில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய கவுர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்தில் 74 ரன்கள் குவித்தார்.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது.