கிரிக்கெட் (Cricket)
null

இது பைத்தியக்காரத்தனம்: அப்போது ரொனால்டோ... இப்போது பும்ரா - ஸ்டெய்ன் விமர்சனம்

Published On 2025-07-03 14:03 IST   |   Update On 2025-07-03 14:04:00 IST
  • பும்ராவிற்கு பதில் ஆகாஷ் தீப் அணியில் இடம்பிடித்துள்ளார்.
  • பும்ரா அணியில் இடம் பெறாதது குறித்து ஸ்டெய்ன் விமர்சனம் செய்துள்ளனர்.

இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டது. ஷர்துல் தாகூர், பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் நிக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் பும்ரா அணியில் இடம் பெறாதது குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விமர்சனம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஸ்டெய்ன் தனது எக்ஸ் பதிவில், "போர்ச்சுகல் அணியில் உலகத்திலேயே தலைசிறந்த ஸ்ட்ரைக்கர் ரொனால்டோ தான். ஆனால் அவர்கள் அவரையே அணியில் விளையாடாமல் இருக்க முடிவு செய்தனர். இது பைத்தியக்காரத்தனம். அதேபோல இந்தியாவும் பும்ராவை அணியில் வைத்துகொண்டே விளையாடாமல் இருக்க முடிவு செய்தனர். எனக்கு இது குழப்பமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News