கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து தொடர்: 2-வது பயிற்சி போட்டியில் விளையாடும் கேஎல் ராகுல்

Published On 2025-05-30 15:28 IST   |   Update On 2025-05-30 15:28:00 IST
  • கே.எல். ராகுல் இங்கிலாந்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
  • 34.11 சராசரியுடன் 2 சதங்களுடன் 614 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. முதல் பயிற்சி போன்று இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2-வது பயிற்சி போட்டியில் கேஎல் ராகுல் விளையாட உள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் சீனியர் அணியின் இடம் பிடித்த கேஎல் ராகுல், இந்திய ஏ அணியுடன் இணைந்து பயிற்சி போட்டியில் விளையாடுவார். அவர் வருகிற திங்கள்கிழமை விமானம் மூலம் இங்கிலாந்து செல்ல உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

கே.எல். ராகுல் இங்கிலாந்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், 34.11 சராசரியுடன் 2 சதங்களுடன் 614 ரன்கள் எடுத்துள்ளார்.

Tags:    

Similar News