கிரிக்கெட் (Cricket)
2வது பயிற்சி போட்டியில் கே.எல்.ராகுல் சதம்: முதல் நாள் முடிவில் இந்தியா ஏ 319 ரன்கள் சேர்ப்பு
- டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி சதம் விளாசி 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
நார்த்தம்ப்டன்:
இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதும் 2-வது பயிற்சி ஆட்டம் நார்த்தம்ப்டனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய ஏ அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 17 ரன்னும், கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 11 ரன்னும் எடுத்தனர். கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி சதம் விளாசி 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 15 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடங்கும்.
கருண் நாயர் 40 ரன்னில் அவுட்டானார். நடுவரிசையில் சிறப்பாக ஆடி அதிரடி காட்டிய துருவ் ஜூரல் 52 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 81 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்துள்ளது.