கிரிக்கெட் (Cricket)

டெஸ்டில் அதிக ரன்கள்: ஜாம்பவான்களின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்

Published On 2025-07-19 01:20 IST   |   Update On 2025-07-19 01:20:00 IST
  • மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகித்து வருகிறது.
  • இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி தொடங்குகிறது.

லண்டன்:

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகித்து வருகிறது.

இதற்கிடையே, இரு அணிகளும் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார். ஜோ ரூட் தற்போது 13,259 ரன்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.

இந்தப் போட்டியில் 30 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டையும், 31 ரன்களை எடுத்தால் ஜேக் காலீசையும், 120 ரன்கள் எடுத்தால் அதிக ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங் சாதனையையும் முறியடிப்பார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். அவர் 15,921 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News