கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்கள்: ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்

Published On 2025-06-24 11:26 IST   |   Update On 2025-06-24 11:26:00 IST
  • 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது.
  • இந்திய அணியின் 2 ஆவது இன்னிங்சில் ஷர்துல் தாக்கூர் கேட்சை ஜோ ரூட் பிடித்தார்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.

இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியின் 2 ஆவது இன்னிங்சில் ஷர்துல் தாக்கூர் கேட்சை ஜோ ரூட் பிடித்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற ராகுல் டிராவிட்டின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார்.

டெஸ்ட் போட்டிகளில் டிராவிட், ரூட் ஆகியோர் இதுவரை 210 கேட்சுகள் பிடித்து அதிக கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார். இதற்கு அடுத்த இடங்களில் ஜெயவர்தனே (205), ஸ்மித் (200) ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News