இந்தியாவுக்கு எதிரான பல சாதனைகளை குவித்த யான்சென்
- 9-வது வரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் யான்சென் களமிறங்கினார்.
- யான்சென் 7 சிக்சருடன் 93 ரன்கள் நொறுக்கினார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில்
9-வது வரிசையில் களம் புகுந்த தென்ஆப்பிரிக்க வீரர் யான்சென் 7 சிக்சருடன் 93 ரன்கள் நொறுக்கினார். 9 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த சாதனையாளர் பட்டியலில் யான்சென் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
நியூசிலாந்தின் டிம் சவுதி 2008-ம் ஆண்டு நேப்பியரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 9 சிக்சர் அடித்ததே இந்த வகையில் சாதனையாக உள்ளது.
ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விரட்டிய தென்ஆப்பிரிக்க வீரர்கள் டிவில்லியர்ஸ், குயின்டான் டி காக் (இருவரும் தலா 7 சிக்சர்) ஆகியோரின் சாதனையை யான்சென் சமன் செய்தார்.
இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனைக்கு யான்சென் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் 6 சிக்சர் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.