கிரிக்கெட் (Cricket)
null

சிஎஸ்கே அணியில் இணையும் இங்கிலாந்து முன்னாள் வீரர் #IPL2026

Published On 2026-03-05 10:34 IST   |   Update On 2026-03-05 11:22:00 IST
  • 19-வது ஐபிஎல் சீசன் 2026 மார்ச் 28 அன்று தொடங்கி மே 31 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக, முழுமையான அட்டவணையை வெளியிடுவதில் பிசிசிஐ நிதானம் காட்டி வருகிறது.

19-வது ஐபிஎல் சீசன் 2026 மார்ச் 28 அன்று தொடங்கி மே 31 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக, முழுமையான அட்டவணையை வெளியிடுவதில் பிசிசிஐ நிதானம் காட்டி வருகிறது.

இந்நிலையில் 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் ஜேம்ஸ் போஸ்டர் இணைந்துள்ளார்.

இவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும், உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.

இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள போஸ்டர், பிஎஸ்எல், ஐஎல்டி20 மற்றும் தி ஹண்ட்ரட் போன்ற பல்வேறு வெளிநாட்டு டி20 தொடர்களிலும் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.

2025 சீசனில் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, அணியின் பீல்டிங் தரத்தை மேம்படுத்த சிஎஸ்கே நிர்வாகம் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

Tags:    

Similar News