IPL இறுதிப்போட்டியில் டிம் டேவிட் விளையாடுவாரா? - RCB கேப்டன் விளக்கம்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
- 2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது.
ஆர்.சி.பி. அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் காயம் காரணமாக குவாலிபையர் 1 போட்டியில் விளையாடவில்லை.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் டிம் டேவிட் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், "இன்று நடைபெறவுள்ள இறுதி போட்டியில் டிம் டேவிட் பங்கேற்பாரா என்பது எனக்கே இன்னும் தெரியவில்லை. மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகிறது. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக இறுதிப்போட்டியில் பில் சால்ட் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.